'அவர் ஒரு சிறந்த நடிகர்...அவரைப்போல ஆக வேண்டும்' - நடிகை பார்வதி

2 months ago 14

சென்னை,

தமிழில் 'பூ' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான பார்வதி, தொடர்ந்து கமல்ஹாசனின் 'உத்தம வில்லன்', தனுஷ் ஜோடியாக 'மரியான்', 'சென்னையில் ஒருநாள்' உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். மலையாளத்தில் அதிக படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில், விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் படத்தில் நடித்திருந்தார்.

பா.ரஞ்சித் இயக்கி இருந்த இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நடிகர் விக்ரமை பார்வதி பாராட்டி பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

'விக்ரம் எந்த ஈகோவும் இல்லாத சிறந்த நடிகர் மட்டுமில்லாமல் சிறந்த மனிதரும் கூட. 'தங்கலான்' படப்பிடிப்பில், அவர் அனைவரையும் மரியாதையுடன் நடத்தினார், அது ஒரு புத்துணர்ச்சியூட்டும் அனுபவமாக இருந்தது. அப்படிப்பட்ட நடிகர்களைப் பார்க்கும் போது, அவர்களைப்போல் இருந்தால் எவ்வளவு அருமையாக இருக்கும் என்று சில சமயம் நினைப்பேன்' என்றார்

Read Entire Article