அரூர், டிச.6: மொரப்பூர் பகுதியில் அவரைக்காய் விளைச்சல் அமோகமாக உள்ளது. 50 நாள் பயிரான அவரைக்காய், உணவில் அதிகம் சேர்க்கப்படுவதால், விலையும் ஓரளவிற்கு உள்ளது. அவரைக்காய்கள் விளைச்சலை பொறுத்து, ஒரு ஏக்கர் பரப்பில் ஒரு டன் அளவிற்கு காய்கள் கிடைக்கிறது. அவரைக்காய்கள் அதிகம் உணவில் சேர்க்கப்படுவதால், இதன் தேவை எப்போதும் இருந்து வருகிறது. தற்போது மொரப்பூர் பகுதியில் அதிக விளைச்சலை கண்ட நிலையில், இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மண்டிகள் மூலம் அவரைக்காய்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. கிலோ ₹50க்கு விற்பனையாகி வருகிறது. அதனால் அவரைக்காய் சாகுபடி செய்த விசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
The post அவரைக்காய் விளைச்சல் அமோகம் appeared first on Dinakaran.