
சென்னை,
''குபேரா'' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கொண்டாட்டத்தில் இருக்கும் இயக்குனர் சேகர் கம்முலா, விஜய் தேவரகொண்டாவை வைத்து ஒரு காதல் படத்தை உருவாக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
சமீபத்திய நேர்காணல் ஒன்றில், கம்முலாவிடம், காதல் படத்தை உருவாக்க விரும்புகிறீர்களா?, அப்படி எடுத்தால் எந்த நடிகரை தேர்ந்தெடுப்பீர்கள் என்று கேட்கப்பட்டது, அதற்கு அவர் சிறிதும் யோசிக்காமல், விஜய் தேவரகொண்டாவின் பெயரை கூறினார்.
சேகர் கம்முலா இயக்கத்தில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான ''லைப் இஸ் பியூட்டிபுல்'' படத்தில் விஜய் தேவரகொண்டா ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், இருவரும் மீண்டும் இணைவதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.