
ஐதராபாத்,
தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான இளம் நட்சத்திரங்களில் ஒருவர் விஷ்வக் சென். தற்போது இவர் 'லைலா' என்ற படத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக அகன்ஷா ஷர்மா நடித்திருக்கிறார். வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு பேர்போன விஷ்வக் சென் இப்படத்தில் ஆண், பெண் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
ராம் நாராயண் இயக்க ஷைன் ஸ்கிரீன்ஸ் பேனரின் கீழ் சாஹு கரபதி தயாரித்த இப்படம் வருகிற 14-ம் தேதி வெளியாக உள்ளது
இந்நிலையில், லைலா படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஐதராபாத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில், மெகாஸ்டார் சிரஞ்சீவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தார். அப்போது நடிகர் விஸ்வக் சென் கூறுகையில்,
கே. விஸ்வநாத் இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்த 'ஆபத்பாந்தவுடு' படத்தைப் பார்த்துதான் எனக்குள் நடிகராக வேண்டும் என்ற எண்ணம் உண்டானது' என்றார்.
மேலும் சிரஞ்சீவி, விஷ்வக் சென் மிகவும் திறமையான நடிகர் என்றும், அவர் சினிமா வாழ்க்கையில் பெரிய இடத்தை பிடிப்பார் என்றும் பாராட்டினார்.