
சென்னை,
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ரெட்ரோ. பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படம் வருகிற மே 1-ம் தேதி தொழிலாளர் தினத்தில் வெளியாக உள்ளது.
இதற்கிடையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா கடந்த 2 தினங்களுக்கு முன்பு நடந்தது. இந்த டிரெய்லரை 'பிரேமம்' படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் கட் செய்திருந்தார்.
இவ்விழாவில் கார்த்திக் சுப்புராஜ், அல்போன்ஸ் குறித்து பகிர்ந்து கொண்டார், அவர் கூறுகையில்" அல்போன்ஸ் எனது மிக நெருங்கிய நண்பர். எனது முதல் குறும்படமான 'நாளைய இயக்குனர்' படத்தை நானே எடிட் செய்தேன்.
அந்த நேரத்தில் எனக்கு நல்ல எடிட்டருடன் பணியாற்ற அலோசனை வழங்கப்பட்டது. அப்போது நான் முதலில் அணுகிய நபர் அல்போன்ஸ். 'நாளைய இயக்குனர்' படத்தின்போது அல்போன்ஸுடன்தான் அதிக நேரம் செலவிட்டேன்.
தற்போது நாங்கள் மீண்டும் ஒன்றாக பணியாற்றியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். தொடர்ந்து இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்' என்றார்.