'அவருடன் நடிக்க ஆசை' - கே.ஜி.எப் நடிகை

4 weeks ago 8

ஐதராபாத்,

நானி தயாரித்து நடித்திருக்கும் படம் ஹிட் 3. கே.ஜி.எப் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தை பிரபல இயக்குனர் சைலேஷ் கொலானு இயக்குகிறார்.

இப்படத்தின் முதல் இரண்டு பாகங்கள் பெரிய ஹிட் அடித்ததைத் தொடர்ந்து மூன்றாம் பாகம் தயாராகி உள்ளது. இப்படத்தின் மூலம் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி தெலுங்கில் அறிமுகமாகிறார். இப்படம் வருகிற மே மாதம் 1-ம் தேதி திரைக்கு வரும்நிலையில், தற்போது படக்குழு புரமோசன் பணியில் ஈடுபட்டுள்ளது.

அதில், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி ஷாருக்கானுடன் நடிக்க ஆசை இருப்பதாக கூறினார். அவர் கூறுகையில், "நான் சிறு வயதில் ஷாருக்கானின் படங்களை நிறைய பார்த்திருக்கிறேன். அவரது படத்தில் நடிக்க ஆசை இருக்கிறது. ராஜ்குமார் ஹிரானி சார் மற்றும் சஞ்சய் லீலா பன்சாலி சார் ஆகியோர் இயக்கத்தில் பணியாற்றவும் விரும்புகிறேன்" என்றார்.

Read Entire Article