
கடையநல்லூர் கோட்ட செயற்பொறியாளர் கற்பகவிநாயக சுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
நாரணாபுரம் துணைமின் நிலையத்தில் நாளை (15.5.2025) வியாழன்கிழமை அன்று அதிக திறன் கொண்ட மின்மாற்றி-2ல் சீரான மின் விநியோகத்தை உறுதி செய்யும் விதமாக அத்தியாவசியம் மற்றும் அவசரகால பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட இடங்களில் மின்விநியோகம் இருக்காது.
அதன்படி சங்கனாப்பேரி, சங்குபுரம், கீழப்புதூர், நெல்கட்டும்செவல், தேசிங்கபட்டி, தும்பைமேடு, சுப்பையாபுரம், ஏமன்பட்டி, ராமநாதபுரம், வேலாயுதபுரம், கூடலூர், மேட்டுப்பட்டி, ஆத்துவழி, மேலபுதூர், திருமலாபுரம், உள்ளார் ஆகிய பகுதிகளில் நாளை காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.