அழகர்கோயிலில் பகல் பத்து உற்சவம் இன்று தொடங்குகிறது: ஜன.10ம் தேதி சொர்க்க வாசல் திறப்பு

3 weeks ago 4

 

மதுரை, டிச. 31: மதுரை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அழகர்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பு வாய்ந்தவை. அந்த வகையில் இந்தாண்டு மார்கழி மாத பகல் பத்து உற்சவம் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இதில் உற்சவர் சுந்தரராஜப் பெருமாள் மேளதாளம் முழங்க, தீவட்டி பரிவாரங்களுடன் புறப்பாடாகி கோயிலில் உள்ள கருடாழ்வார் சன்னதி முன்புள்ள மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெற உள்ளது.

பின்னர் அங்கு பெருமாளுக்கு வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகளுக்கு பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு வருகிற ஜன.10ம் தேதி காலை 5.15 மணிக்கு மேல் 6.15 மணிக்குள் நடைபெற உள்ளது. அதன் பிறகு ராப்பத்து உற்சவம் தொடங்கி நடைபெற உள்ளது.

ஜன.19ம் தேதி இந்த விழா நிறைவு பெறுகிறது. இதே போல் இக்கோயிலின் உபகோயிலான தல்லாகுளம் பெருமாள் கோயிலிலும் சொர்க்கவாசல் திறப்பு ஜன.10ம் தேதி காலையில் இதே நேரத்தில் இந்த நிகழ்வு நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கடாஜம், கோயில் துணை ஆணையர் (கூ.பொ) செல்லத்துரை, குழு உறுப்பினர்கள் பாண்டியராஜன், செந்தில்குமார், மீனாட்சி, ரவிக்குமார் மற்றும் கோயில் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

The post அழகர்கோயிலில் பகல் பத்து உற்சவம் இன்று தொடங்குகிறது: ஜன.10ம் தேதி சொர்க்க வாசல் திறப்பு appeared first on Dinakaran.

Read Entire Article