அல்லு அர்ஜுன் முதல் ஸ்ரீலீலா வரை - புஷ்பா 2 படத்திற்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

6 months ago 18

சென்னை,

இயக்குனர் சுகுமார் மற்றும் நடிகர் அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'புஷ்பா 2 தி ரூல்'. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் மைம் கோபி, பிரகாஷ் ராஜ், பிரியாமணி, அஜய் கோஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பின்னணி இசையை சாம் சி.எஸ். உருவாக்கி இருக்கிறார்.மேலும் இப்படத்தில் 'டான்சிங் குயின்' நடிகை ஸ்ரீலீலா நடனமாடியுள்ளார். புஷ்பா படத்தின் முதல் பாகம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாம் பாகத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.

இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு வசூல் மட்டுமே ரூ.100 கோடியை கடந்துள்ளதாக கூறப்படும் நிலையில், நேற்று புஷ்பா 2 திரைப்படம் உலகளவில் வெளியானது.

இந்நிலையில், இப்பட நட்சத்திரங்கள் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, நடிகர்களான அல்லு அர்ஜுன் ரூ. 300 கோடியும், பகத் பாசில் ரூ. 8 கோடியும், இயக்குனர் சுகுமார் ரூ. 15 கோடியும், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ரூ. 5 கோடியும் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.

அதேபோல், நடிகைகளான ராஷ்மிகா மந்தனா ரூ.10 கோடியும், ஸ்ரீலீலா ரூ. 2 கோடியும் சம்பளம் வாங்கியதாக தெரிகிறது.

Read Entire Article