அலங்காநல்லூர் அருகே பரபரப்பு இரு வாலிபர்களுக்கு பட்டாக்கத்தி வெட்டு: முகமூடி நபர்கள் கைவரிசை

2 months ago 6

 

அலங்காநல்லூர், பிப். 18: அலங்காநல்லூர் அருகே பெரிய இலந்தைகுளத்தை சேர்ந்தவர்கள் முனிஸ்வரன் (25) மற்றும் கிருபாகரன் (20). இவர்கள் இருவரும் அருகில் உள்ள குட்டிமேக்கிபட்டி மந்தை திடலில் டூவீலரில் அமர்ந்தபடி நேற்றிரவு 8.30 மணியளவில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது பதிவு எண் இல்லாத காரில் வந்த முகமூடி அணிந்திருந்த மர்ம நபர்கள் முனிஸ்வரனிடம் ஒரு குறிப்பிட்ட பெயரை சொல்லி விலாசம் கேட்டுள்ளனர்.

இதற்கு தெரியாது என பதிலளித்த அவரை மர்ம நபர்கள் பட்டாக் கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனை தடுக்கச்சென்ற கிருபாகரனுக்கும் வெட்டு விழுந்தது. அவர்கள் அலறியதால், மர்ம நபர்கள் காரில் ஏறி பறந்தனர். தகவலறிந்த அலங்காநல்லூர் போலீசார் 2 வாலிபர்களையும் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் வாயிலாக போலீசார் ஆய்வு செய்ததுடன், வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post அலங்காநல்லூர் அருகே பரபரப்பு இரு வாலிபர்களுக்கு பட்டாக்கத்தி வெட்டு: முகமூடி நபர்கள் கைவரிசை appeared first on Dinakaran.

Read Entire Article