அறப்போர் இயக்கத்துக்கு எதிரான அவதூறு வழக்கு: இபிஎஸ் நேரில் ஆஜர்; விசாரணை டிச.11-க்கு ஒத்திவைப்பு

3 months ago 14

சென்னை: நெடுஞ்சாலை துறை டெண்டர்களில் முறைகேடு என அவதூறு பரப்புவதாக அறப்போர் இயக்கத்துக்கு எதிராக தான் தொடர்ந்த வழக்கில், உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராகி முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சாட்சியம் அளித்தார். இதையடுத்து இவ்வழக்கின் விசாரணை வரும் டிச.11-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

2016-21ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அதிமுக ஆட்சியில், முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி, நெடுஞ்சாலை துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். 2019 முதல் 2021-ம் ஆண்டுகள் வரையில் தஞ்சாவூர், சிவகங்கை, கோவை மாவட்டங்களின் நெடுஞ்சாலை டெண்டர் பணிகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி தலைமைச் செயலர், நெடுஞ்சாலை துறை, லஞ்ச ஒழிப்புத் துறைகளிடம் அறப்போர் இயக்கத்தின் சார்பில் ஜூலை 22-ம் தேதி புகார் அளிக்கப்பட்டிருந்தது.

Read Entire Article