அறந்தாங்கியில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

2 weeks ago 1

அறந்தாங்கி, ஜன. 24: அறந்தாங்கியில் வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகாவிற்கு உட்பட்டதமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். வட்டச் செயலாளர் அய்யப்பன் பொருளாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தனர். இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம், கருணை அடிப்படையில் பணி நியமனம், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்தை வழங்க கோருதல், இயற்கை இடர்பாடுகளில் சிறப்பு படி வழங்குதல், கிராம நிர்வாக அலுவலர் பதவி உயர்வு 20% என்பதனை 30 சதவீதமாக வழங்குதல், பணிமூப்பு காலங்களில் 10 ஆண்டுகளில் என்பதனை ஆறு ஆண்டுகளாக குறைக்க வேண்டும்.

இறந்து போன கிராம உதவியாளருக்கு வரும் காலங்களில் வாரிசு அடிப்படையில் அரசு வேலையில் முன்னுரிமை வழங்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் அமைத்துள்ள கிராம உதவியாளர்களுக்கு ஓட்டுனர் பணி வழங்குதல், ஜமாபந்தி சிறப்புபடி வழங்குதல், கிராம உதவியாளர் பணி தமிழ்நாடு தேர்வாணையம் மூலம் நியமனம் செய்ய கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அறந்தாங்கி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து வருவாய் கிராம ஊழியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post அறந்தாங்கியில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article