அறந்தாங்கி அருகே அரசு பள்ளியில் செல்போன் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு பேனர்

3 months ago 7

அறந்தாங்கி,பிப்.14: அறந்தாங்கி அருகே அரசு பள்ளியில் செல்போன் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு பேனர் வைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் செல்போனை பயன்படுத்தி வருவது அதிகரித்து வருகிறது. இதனால் கண் தொடர்பான பிரச்சனைகள், ஞாபக சக்தி குறைதல், உடல் பருமன், மனநிலை கோளாறு, தனிமைப்படுதல், உடல் ஆரோக்கியம் கெடுதல், மன அழுத்தம், கவனச் சிதைவு கற்றல் கற்பித்தல் குறைபாடு, தூக்கம் கெடுதல் போன்ற எண்ணற்ற பிரச்சனைகளை குழந்தைகள் தற்போது சந்தித்து வருகின்றனர். இதனால் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் மாணவர்கள் செல்போன் பயன்பாட்டை குறைக்கும் விதமாகவும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் அறந்தாங்கி அருகே ஆவணத்தாங்கோட்டை மேற்கு அரசுப் பள்ளியில் செல்போன் விழிப்புணர்வு பேனர் வைக்கப்பட்டுள்ளது.

இதில் செல்போன் பயன்பாட்டால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளும் அதன் தொடர்பான புகைப்படங்களும் மேலும் அதை தவிர்ப்பதற்கான வழிமுறைகளும் குறித்த வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இதை படிக்கும் பார்க்கும் குழந்தைகள் மனதில் செல்போன் தொடர்பான மாற்றம் நிகழும் என பள்ளி நிர்வாகம் இத்தகைய ஏற்பாட்டை செய்துள்ளது. மேலும் இது தொடர்பான விழிப்புணர்வை பெற்றோர்களிடமும் வழங்க உள்ளதாக கூறி உள்ளனர்.

The post அறந்தாங்கி அருகே அரசு பள்ளியில் செல்போன் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு பேனர் appeared first on Dinakaran.

Read Entire Article