சென்னை: இந்து சமய அறநிலையத்துறை பதிப்பகப் பிரிவால் மறுபதிப்பு செய்யப்பட்ட அரிய 300 ஆன்மிக நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்து சமய அறநிலையத்துறையானது சமய நெறிகளை பரப்பிடும் வகையில் அரிய ஆன்மிக நூல்களை மறுபதிப்பு செய்து புதுப்பொலிவுடன் நூலாக்கம் செய்யும் பணிகளை மேற் கொண்டு வருகிறது. மேலும், அந்த நூல்கள் அனைவருக்கும் கிடைத்திடும் வகையில் தகோயில்களில் புத்தக விற்பனை நிலையங்களையும் அமைத்து செயலாற்றி வருகிறது.