அறநிலையத்துறை கோயில்களில் முதன்முதலாக 11 பெண் ஓதுவார்களை நியமனம் செய்தது திமுக ஆட்சி தான்: சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்

2 weeks ago 3

பேரவையில் கேள்வி நேரத்தின் போது ராமநாதபுரம் எம்எல்ஏ காதர்பாட்ஷா (எ) முத்துராமலிங்கம்(திமுக) பேசுகையில், “வருகிற 4ம் தேதி உத்திரகோசமங்கை கோயில் குடமுழுக்கு விழா நடைபெற இருக்கிறது. அதில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுமா? என்றார்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசுகையில்,
‘‘உத்திரகோசமங்கை திருக்கோயில் என்பது முதலில் சிவனுக்காக கட்டப்பட்ட ஒரு திருக்கோயிலாகும். இந்த திருக்கோயிலுக்கு ஏப்ரல் நான்காம் தேதி குடமுழுக்கு நடைபெற இருக்கின்றது. இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயில்களில் 110 ஓதுவார்கள் இருக்கின்றார்கள். அதில் 45 ஓதுவார்கள் திராவிட மாடல் ஆட்சி ஏற்பட்ட பிறகுதான் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அதில் இன்னொரு முக்கிய செய்தியை குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் முதல்முதலில் 11 பெண் ஓதுவார்களை நியமித்த ஆட்சி திராவிட மாடல் ஆட்சியாகும். ஆகவே உறுப்பினர் கூறிய திருக்கோயில் மட்டுமல்லாமல் அன்றைய தினம் மூன்று திருக்கோயில்களில் குடமுழுக்கு நடைபெற இருக்கின்றனது. இந்த மூன்று திருக்கோயில்களிலும் அன்னை தமிழுக்கும் முக்கியத்துவம் வழங்கப்படும். அதோடு மட்டுமல்லாமல் நூற்றுக்கும் மேற்பட்ட ஓதுவார்களும் குறிப்பாக பெண் ஓதுவார்களும் பங்கேற்று வேத மந்திரங்களை ஓதுவார்கள்” என்றார்.

The post அறநிலையத்துறை கோயில்களில் முதன்முதலாக 11 பெண் ஓதுவார்களை நியமனம் செய்தது திமுக ஆட்சி தான்: சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article