அர்ஜுனின் "தீயவர் குலை நடுங்க" முதல் பாடல் வெளியீடு

6 days ago 6

சென்னை,

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராக இருந்து வருபவர் ஆக்சன் கிங் அர்ஜுன். அர்ஜுன் நடிப்பில் வெளியான 'ஜென்டில்மேன், ஜெய்ஹிந்த், கர்ணா, முதல்வன்' போன்ற படங்கள் சூப்பர் ஹிட் அடித்தன. சமீபகாலமாக அவர் ஹீரோவாக நடிக்காமல் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.இதற்கிடையில் இவர் 1992-ல் வெளியான 'சேவகன்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். 'ஜெய் ஹிந்த்', 'தாயின் மணிக்கொடி', 'வேதம்', 'ஏழுமலை' என 12 படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக இவர் தனது மகள் ஐஸ்வர்யாவை வைத்து 'சொல்லிவிடவா' படத்தை இயக்கியிருந்தார். இந்தநிலையில் 6 வருடங்களுக்குப் பின் தற்போது மீண்டும் இயக்குனர் ஆகிறார் அர்ஜுன். நிரஞ்சன் மற்றும் ஐஸ்வர்யா நடிக்கும் இந்தப் படம் தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகவுள்ளது.சத்யராஜ் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.இவர் கடைசியாக ஜீவாவின் அகத்தியா திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் காக்கா முட்டை, தர்மதுரை, கனா ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அதே சமயம் இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மேலும் இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாள உள்ளிட்ட மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய இருவரும் இணைந்து தீயவர் குலை நடுங்க எனும் திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்தில் ஜிகே ரெட்டி, லோகு, பிக் பாஸ் அபிராமி, ராம்குமார், தங்கதுரை மற்றும் பலர் நடித்துள்ளனர். தினேஷ் லக்சுமணன் இந்த படத்தை எழுதி, இயக்கியுள்ளார். ஜி.ஆர். ஆர்ட்ஸ் நிறுவனமும் சன் மூன் யுனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. பரத் ஆசிவகன் இந்த படத்திற்கு இசையமைக்க சரவணன் அபிமன்யு இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

ஆரம்பத்தில் இந்த படத்திற்கு 'தீயவர் குலைகள் நடுங்க' என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. தற்போது அதில் சிறிய திருத்தம் செய்து 'தீயவர் குலை நடுங்க' என்று படத்தின் தலைப்பை மாற்றியுள்ளனர். அடுத்தது ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் இந்த படம் நீண்ட நாட்களாக ரிலீஸ் செய்யப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலான 'அந்திபேர அழகலியே' பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

'AndhiperaAzhagaaliye' first single from #TheeyavarKulaiNadunga is out now https://t.co/OTWT7RFL9gStarring Action King Arjun & Aishwarya Rajesh pic.twitter.com/SgsTDCgCRP

— AmuthaBharathi (@CinemaWithAB) April 4, 2025
Read Entire Article