அர்சிக்கெரே சிவாலயம்

3 days ago 4

சிற்பமும் சிறப்பும்

ஆலயம்: ஹொய்சாள மன்னர் இரண்டாம் வீர வல்லாளன் (பொ.ஆ.1220) ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது.காலம்: `அர்சிக்கெரே’ என்ற ஊரின் பெயருக்கு அரசியின் ஏரி (கெரே) என்று பொருள்.

சந்திரமௌலேஸ்வரா கோயில் – `ஈஸ்வரன் கோயில்’ அல்லது `சிவாலயா’ என்றும் அழைக்கப்படுகிற இக்கோயில், ஹொய்சாளர் கோயில்களின் வரிசையில் ஒரு அரிய கட்டடக்கலை அதிசயமாகும். 16 முனைகள் கொண்ட நட்சத்திர வடிவத்தில் மிகவும் சிக்கலான கட்டடவியல் அமைப்புடன், மேலிருந்து பார்க்கையில் ஒரே வரிசையில் அமைந்த தனித்துவமான விண்மீன் தொகுப்பில் உள்ள மூன்று நட்சத்திரங்களைப் போல இக்கோயில் தோற்றமளிக்கிறது.

ஒரு தளத்துடன் (‘ஏககூட’) அமைக்கப்பட்ட இக்கோயில் விமானத்தில் ‘சுகநாசி’யுடன் உள்ளது, அதன் மீது அமர்ந்திருக்கும் காளை பிற்காலச் சேர்க்கையாகும். இன்றைய லேத் இயந்திர தொழில்நுட்பப் பாணியில் அமைந்த இக்கோயிலின் தூண்களும், மிகவும் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய மேற்கூரைகளும் பெயர் தெரியா சிற்பிகளின் நிபுணத்துவத்திற்கும் கைவினைத்திறனுக்கும் சான்றாக நிற்கின்றன.

மிகவும் பிரம்மாண்டமான கோயில் கட்டுமானங்கள் ஏதுமில்லாமல் இருந்தாலும் சிறப்பான அமைப்பியல், சிற்ப நுணுக்கம் ஆகியவற்றால் இக்கோயில் தொல்லியல் ஆர்வலர்களை பெரிதும்
ஈர்க்கின்றது.பொ.ஆ.11 ஆம் நூற்றாண்டில் ஹொய்சாள மன்னன் எரேயங்காவின் (1098-1102) ராணி மகாதேவியால் கட்டப்பட்ட ஒரு பெரிய ஏரியிலிருந்து இந்தப்பெயரைப் பெற்றது. சிறிய வணிக நகரான அர்சிக்கெரே, கர்நாடகா மாநிலம், ஹாசன் மாவட்டத்தில் உள்ளது.

 

The post அர்சிக்கெரே சிவாலயம் appeared first on Dinakaran.

Read Entire Article