அரூர், ஜன.18: சேலம், திருச்செங்கோடு, ராசிபுரம், அயோத்தியாப்பட்டணம், அரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் நடைபயணமாக திருப்பதி செல்கின்றனர். தற்போது அரூர் வழியாக ஆயிரக்கணக்கானோர் நடந்து செல்கின்றனர். அவர்கள் அரூர், ஊத்தங்கரை, திருப்பத்தூர், வேலூர், சித்தூர் வழியாக திருப்பதியை சென்றடைகின்றனர். அரூரிலிருந்து 250 கிமீ தூரத்தை அவர்கள் 5 நாட்களில் சென்றடைகின்றனர். அவ்வப்போது ஆங்காங்கே சிறிது நேரம் ஓய்வெடுத்து கொண்டு நடைபயணத்தை தொடர்கின்றனர்.
The post அரூர் வழியாக திருப்பதிக்கு பக்தர்கள் நடைபயணம் appeared first on Dinakaran.