அரூர்: சர்க்கரை ஆலை ஆய்வுக்கு வந்த அமைச்சரை தடுத்து வாக்குவாதம்; 2 அதிமுக எம்எல்ஏக்கள் கைது

7 hours ago 2

அரூர்: அரூர் அருகே சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை ஆய்வுக்கு வந்த சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரனை, தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் 2 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

தருமபுரி மாவட்டம், அரூர் அருகேயுள்ள கோபாலபுரத்தில் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இதனை ஆய்வு செய்ய தமிழக சுற்றுலா மற்றும் சர்க்கரை ஆலைத் துறை அமைச்சர் ராஜேந்திரன் இன்று (மே 9) காலை வந்தார். அப்போது ஆலையின் நுழைவாயில் பகுதியில் நின்றிருந்த அதிமுக எம்எல்ஏக்கள் சம்பத்குமார் (அரூர்) கோவிந்தசாமி (பாப்பிரெட்டிபட்டி) ஆகியோர் தடுத்து நிறுத்தி , ஆலை செயல்பாடுகள் குறித்து சட்டசபையில் தவறான தகவல் கூறியதாக அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Read Entire Article