அரூர் கோட்டத்தில் சாராயம், மது விற்ற 72 பேர் கைது 1420 மதுபாட்டில், கஞ்சா பறிமுதல்

3 months ago 22

அரூர், அக்.2: அரூர் மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் வசந்தா தலைமையில், போலீசார் கடந்த மாதம் 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அரூர் கோட்டத்தில் கள்ளச்சாராயம், கள்ளத்தனமாக மது வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்வது, ஓட்டல், பெட்டிக் கடையில் குடிக்க அனுமதித்தவர்கள் என அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், காரிமங்கலம், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர் ஆகிய பகுதிகளில் சென்ற மாதம் 11 பெண்கள் உள்பட 72 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 1420 மதுபாட்டில், கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

The post அரூர் கோட்டத்தில் சாராயம், மது விற்ற 72 பேர் கைது 1420 மதுபாட்டில், கஞ்சா பறிமுதல் appeared first on Dinakaran.

Read Entire Article