சென்னை: சென்னை அரும்பாக்கம் பகுதியிலுள்ள விருகம்பாக்கம் கால்வாயில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்தார்.
விருகம்பாக்கம் கால்வாயில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. கடந்த மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே பல்வேறு எச்சரிக்கைகள் விடப்பட்ட நிலையில் மழை வெள்ள பாதிப்புகள் அதிகம் உள்ள பகுதிகளில் அரசுத்துறை அதிகாரிகள், துணை முதலைச்சர், அமைச்சர்கள் ஆகியோர் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் சென்னை அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள விருகம்பாக்கம் கால்வாயினை தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் விருகம்பாக்கம் கால்வாயினை அகலப்படுத்தியும், தூர்வாரியும், கால்வாயின் கரையை வலுப்படுத்தும் வகையில் புதிதாக சுவர்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது.
விருகம்பாக்கம் கால்வாயில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற அதிகாரிகளுக்கு துணை முதலைச்சர் உத்தரவிட்டுள்ளார். விருகம்பாக்கம் கால்வாயினை துணை முதல்வர் ஆய்வு செய்தபோது, விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர், சென்னை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
The post அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள விருகம்பாக்கம் கால்வாயினை ஆய்வு செய்தார் துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின் appeared first on Dinakaran.