அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரி நவ.7-ல் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி: கிருஷ்ணசாமி

4 months ago 19

சென்னை: அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டு அரசாணையை ரத்து செய்தல் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நவ.7ம் தேதி புதிய தமிழகம் கட்சி சார்பில் பேரணி நடைபெறும் என்று அக்கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தி்ன் பூர்வீக தமிழ் குடிமக்களான தேவேந்திர குல வேளாளர், ஆதிதிராவிடர் ஆகிய இரு சமூகத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான இளைஞர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உரிமையை தட்டிப் பறிக்கும் அருந்ததியருக்கே அனைத்து இடங்களையும் தாரை வார்க்கும் அருந்ததியர் உள் இடஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.

Read Entire Article