அருணாச்சலா பொறியியல் கல்லூரிக்கு தேசிய தரச்சான்று

1 month ago 9

நாகர்கோவில், அக் 10: யூ.ஜி.சி.யின் கீழ் இயங்கும் நேக் என்ற தேசிய அமைப்பு கல்லூரிகளின் தரம், தேர்ச்சி விகிதம், கட்டமைப்பு, மாணவிகளின் வேலைவாய்ப்பு மற்றும் ஆசிரிய, ஆசிரியைகளின் தரம் ஆகியவற்றை ஆராய்ந்து கல்லூரிகளுக்கு தர சான்றிதழ் வழங்குகிறது. இதன் அடிப்படையில் இந்த அமைப்பு வெள்ளிச்சந்தை அருகே மணவிளையில் அமைந்துள்ள அருணாச்சலா மகளிர் பொறியியல் கல்லூரியில் இரண்டு நாள்கள் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வு அடிப்படையில் இக்கல்லூரி 3.24 சி.ஜி.பி.எ என்ற சிறந்த மதிப்பெண் பெற்று ‘எ’ தரச்சான்று பெற்றுள்ளது. இந்த சாதனைக்கு உறுதுணையாக இருந்த கல்லூரி முதல்வர், ஐ.க்யு.எ.சி ஒருங்கிணைப்பாளர்கள், துறை தலைவர்கள், ஆசிரியைகள் மற்றும் இதர பணியாளர்களை கல்லூரியின் ஆசிரிய தாளாளர் முனைவர் கிருஷ்ணசுவாமி, துணை தாளாளர் சுனி மற்றும் இயக்குனர்கள் தருண் சுரத், மீனா ஜெனித் ஆகியோர் பாராட்டினார்கள்.

The post அருணாச்சலா பொறியியல் கல்லூரிக்கு தேசிய தரச்சான்று appeared first on Dinakaran.

Read Entire Article