அருகி வரும் சிட்டுக்குருவி இனத்தை பாதுகாப்போம்..!

12 hours ago 1

ஒரு காலத்தில் சிட்டுக்குருவிகளை வீடுகளில் வளர்த்துவரும் அளவிற்கு அவற்றின் இனம் பலகிப்பெருகி இருந்தன. சிட்டுக்குருவிகள் பெரும்பாலும் வீடுகளை தேடி வந்துதான் கூடு கட்டும். வீட்டின் பரண்கள், விட்டம் மற்றும் ஓடுகளின் இடைவெளிகள், சுவர்களில் உள்ள பொந்துகளில் குருவிகள் கூடுகட்டி வாழ்வதை வழக்கமாக கொண்டிருக்கும்.

மூர்த்தி சிறிது என்றாலும் கீர்த்தி பெரிது என்பார்கள். அந்த வகையில், சிட்டுக்குருவிகள் சின்னஞ்சிறிய உயிரினமாக இருந்தாலும் மனிதர்களுக்கு பெரிய அளவில் நன்மைகளை வழங்குகின்றன.

வயல்களில் உள்ள தீமை விளைவிக்கும் பூச்சிகளை இந்த குருவிகள் அழிக்கின்றன. அத்துடன், வீட்டில் உள்ள கொசு முட்டைகள் மற்றும் மனித இனத்துக்குத் தீங்கு விளைவிக்கும் உயிரினங்களையும் அழிக்கின்றன. பல்வேறு பூச்சிகள் மற்றும் பூச்சிகளை உண்பதன் மூலம் பூச்சிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. இதுதவிர, மகரந்தச் சேர்க்கை மற்றும் விதை பரவலில் சிட்டுக்குருவிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவற்றின் இருப்பு பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்துகிறது. இது கிராமப்புற மற்றும் நகர்ப்புற சுற்றுச்சூழல் அமைப்புகளின் ஆரோக்கியத்திற்கு அவசியமானதாக அமைகிறது.

 

இவ்வாறு சுற்றுச்சூழல் சமநிலையை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை சமீப ஆண்டுகளாக வெகுவாக குறைந்துவிட்டது.

சுற்றுச்சூழல் மாற்றங்கள், மனிதர்களின் வாழ்வியல் மாற்றங்கள், பழக்கவழக்க மாறுதல், நகரமயமாக்கல், கூரை வீடுகள் இல்லாமை உள்ளிட்ட பல்வேறு சூழ்நிலைகள், குருவிகளின் வாழ்விடத்தை கேள்விக்குறியாக்கிவிட்டன. சிட்டுக்குருவிகள் இனப்பெருக்கம் செய்ய தேவையான சூழல் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் அந்த இனமும் அழிந்துகொண்டிருக்கிறது. இதன் விளைவாக சுற்றுச்சூழல் சமநிலையும் பாதிக்கப்படுகிறது.

எனவே, சிட்டுக்குருவி இனத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம். இதற்காக ஆண்டுதோறும் மார்ச் 20-ம் தேதி உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தமது வாழ்வுக்காக அவை எதிர்நோக்கும் பிரச்சினைகளை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்துவதே உலக சிட்டுக் குருவிகள் தினத்தின் நோக்கம் ஆகும்.

 

இன்று (20.3.2025) உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படும் நிலையில், சிட்டுக்குருவிகள் இனத்தை பாதுகாக்க தங்களால் முடிந்தவற்றை செய்யலாம். இதற்காக பல்வேறு தன்னார்வ அமைப்புகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. அவர்களுடன் கைகோர்த்து பணியாற்றலாம்.

மக்கள் தங்களது வீடுகளில் சிட்டுக் குருவிகள் வாழ கூண்டுகளை அமைக்கலாம். வசதி வாய்ப்பு உள்ளவர்கள் சிறிய அளவில் மாடித்தோட்டங்களை உருவாக்கலாம். அதையொட்டி குருவிகளுக்கான கூண்டுகளை வைக்கலாம். வீடுகளில் மீதமான தானிய வகைகளை குருவிகளுக்கு உணவாக வைக்கலாம். 

Read Entire Article