இத்தாலியில் கடலில் படகு கவிழ்ந்து 6 அகதிகள் பலி: 40 பேரின் கதி என்ன?

6 days ago 2

ரோம்,

ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் ஏராளமானோர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைகின்றனர். அவ்வாறு செல்பவர்கள் பெரும்பாலும் சட்ட விரோத பயணத்தையே மேற்கொள்கின்றனர். அவற்றில் பல பயணங்கள் ஆபத்தில் முடிகின்றன. எனவே இதனை கட்டுப்படுத்த கடலோர போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். எனினும் இந்த சட்ட விரோத பயணங்கள் தொடர் கதையாக உள்ளது.

அந்தவகையில் வட ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் இருந்து சுமார் 60 அகதிகளுடன் ஒரு படகு இத்தாலி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது ராட்சத அலை தாக்கி அந்த படகு நடுக்கடலில் கவிழ்ந்தது. தகவலறிந்த கடலோர போலீசார் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். எனினும் இந்த விபத்தில் 6 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். 40-க்கும் மேற்பட்டோர் கடலில் மாயமானதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

Read Entire Article