அரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா மறைவு: பிரதமர் மோடி, அரசியல் தலைவர்கள் இரங்கல்

4 weeks ago 7

குருகிராம்: ஐந்து முறை அரியானாவின் முதல்வராகவும் இருந்த ஓம் பிரகாஷ் சவுதாலா நேற்று காலமானார். அரியானா முன்னாள் முதல்வர் ஒம் பிரகாஷ் சவுதாலா(89). அரியானா மாநிலம் குருகிராமில் வசித்து வந்த சவுதாலாவுக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.

மருத்துவமனையில் நள்ளிரவு 12 மணியளவில் சவுதாலா காலமானார். முன்னாள் துணை பிரதமர் சவுத்ரி தேவி லாலின் மூத்த மகனான சவுதாலா 5 முறை அரியானாவின் முதல்வராக இருந்தவர். இந்திய தேசிய லோக் தளத்தின் தலைவராக இருந்தார். அவருக்கு இரண்டு மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். சவுதாலா மறைவுக்கு பிரதமர் மோடி மற்றும் பல அரசியல் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

* 82வயதில் 10ம் வகுப்பு தேர்ச்சி
சவுதாலா ஆரம்ப கல்விக்கு பின் பள்ளிப்படிப்பை தொடரவில்லை. 2013ம் ஆண்டு ஆசிரியர் பணி நியமன ஊழல் தொடர்பாக சவுதாலா திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அப்போது தனது 82வயதில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றார்.

The post அரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா மறைவு: பிரதமர் மோடி, அரசியல் தலைவர்கள் இரங்கல் appeared first on Dinakaran.

Read Entire Article