அரியானா, ஜம்மு-காஷ்மீரில் திடீர் நிலநடுக்கம்

6 hours ago 2

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீரின் உள்ள ஜம்மு பகுதியில் இன்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 7.36 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

9 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 32.96 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 74.71 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

அரியானா:-

அரியானாவில் உள்ள மகேந்திரகர் பகுதியில் இன்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 7.33 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.8 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 28.25 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 76.18 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

Read Entire Article