சண்டிகர்: அரியானா,சிர்சாசவை சேர்ந்த தேரா சச்சா சவுதா ஆசிரமத்தின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்.ஆசிரம பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குர்மீத் ராம் ரஹீமுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பத்திரிகையாளர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குர்மீத்துக்கும் அவரது கூட்டாளிகள் 3 பேருக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.அரியானாவில் 5ம் தேதி பேரவை தேர்தல் நடக்கிறது.
குர்மீத் ராம் ரஹீம் தன்னை 20 நாள் பரோலில் விடுவிக்குமாறு அரியானா அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பியிருந்தார்.
மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் தேரா சச்சா சவுதா தலைவரின் மனுவை மாநில தலைமை தேர்தல் அதிகாரியின் பரிசீலனைக்கு சிறை துறை அனுப்பி வைத்தது. இந்த நிலையில் குர்மீத் ராம் ரஹீமுக்கு 20 நாள் பரோல் வழங்கி கடந்த திங்கள்கிழமை அரசு அனுமதி அளித்தது. பரோலில் செல்லும் போது தேர்தல் தொடர்பான பணிகளில் ஈடுபடவோ,பொது இடங்களில் பேசவோ கூடாது என்பது உள்பட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. பரோலில் செல்லும் போது,உபி மாநிலம் பாக்பத்தில் உள்ள தேரா ஆசிரமத்தில் தங்கி இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து குர்மீத் ராம் ரஹீம் நேற்று சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
The post அரியானா சட்ட பேரவை தேர்தலையொட்டி குர்மீத் ராம் ரஹீம் பரோலில் விடுதலை appeared first on Dinakaran.