அரியலூர்: விபத்தில் சிக்கிய கார் தீப்பிடித்து எரிந்ததில் ஓட்டல் உரிமையாளர் பலி

1 week ago 3

அரியலூர்,

அரியலூரில் ஓட்டல் நடத்தி வரும் அன்பழகன் என்பவர் இன்று காலை வீட்டில் இருந்து காரில் ஓட்டலுக்கு புறப்பட்டு உள்ளார். அப்போது, சாலையின் தடுப்பில் அவர் சென்ற கார் மோதி விபத்தில் சிக்கியது. இதில் கார் தீப்பிடித்து கொண்டது.

இந்த விபத்தில் ஓட்டல் உரிமையாளர் அன்பழகன் காருக்குள் சிக்கினார். அவரால் உடனடியாக வெளியே வர முடியவில்லை. காரில் இருந்த அன்பழகனை மீட்க அருகில் இருந்தவர்கள் முயற்சித்தனர்.

ஆனால், கார் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இதனால், அதிக கரும்புகையும் வெளிவந்தது. இதில் சிக்கி, மூச்சு திணறி ஓட்டல் உரிமையாளர் பலியானார். காரில் இருந்த எரிபொருள் கசிந்ததில் தீப்பற்றி இருக்கலாம் என கூறப்படுகிறது. காரில் இருந்து வெளியேற முடியாமல் அவர் சிக்கி உயிரிழந்து உள்ளார்.

Read Entire Article