அரியலூர், ஜன. 22: அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 கிராம ஊராட்சிகளிலும் ஜனவரி 26 குடியரசு தினத்தன்று கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் ரத்தினசாமி செய்திக்குறிப்பு: அக்கூட்டத்தில், பின்வரும் பொருட்கள் விவாதிக்கப்படவுள்ளது. கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம். கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை. கொசுக்கள் மூலம் பரவும் டெங்குகாய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல். மக்கள் திட்டமிடல் இயக்கம் (Peoples Plan Campaign) மூலம் 2025-26 ஆம் நிதியாண்டிற்கான கிராம வளர்ச்சித் திட்டத்திற்கு ஒப்புதல் பெறுதல்.
இதரபொருட்கள் குறித்தும் விரிவாக விவாதித்தல். எனவே, மேற்காணும் கிராம சபை கூட்டத்தில் அந்தந்த பகுதிகளில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் தன்னார்வலர்கள், சமுதாய அமைப்பு உறுப்பினர்கள், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொண்டு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி, தெரிவித்துள்ளார்.
The post அரியலூர் மாவட்டத்தில் குடியரசு தின சிறப்பு கிராமசபையில் பொதுமக்கள் பங்கேற்று விவாதிக்கலாம் appeared first on Dinakaran.