அரியலூர், பிப்.10: அரியலூர் கோட்டம் (நெடுஞ்சாலைத்துறை) கட்டுமானம் மற்றும் பராமரிப்பில் கீழப்பழுர் கருவிடைச்சேரி சாலை, விக்ரமங்கலம் கடம்பூர் சாலை மற்றும் அரியலூர்-ஜெயங்கொண்டம் வழி செந்துறை சாலையில் நடைபெறும் சாலைப்பணிகள் மற்றும் பாலம் கட்டுதல் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை விழுப்புரம் கண்காணிப்புப் பொறியாளர் செந்தில்குமார் ஆய்வு மேற்கொண்டார். மேலும் நடைபெற்று வரும் சாலைப்பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுரைகள் வழங்கினார். இவ்ஆய்வின்பொழுது கோட்டப் பொறியாளர் மற்றும் உதவிக்கோட்டப்பொறியாளர் வடிவேல் மற்றும் உதவிப் பொறியாளர்கள் உடனிருந்தனர்.
இதனால் இனிவரும் காலங்களில் அனைத்து அரசுத் திட்ட உதவிகளும் விவசாயிகளின் தரவுத் தளம் அடிப்படையிலேயே வழங்கப்படும். நில விவரங்களை இணைப்பதன் மூலம் அனைத்துத் துறை திட்டங்களையும் எளிதில் பெறலாம்.
The post அரியலூர் கோட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள் ஆய்வு appeared first on Dinakaran.