அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் விழிப்புணர்வு கோலப்போட்டி

16 hours ago 2

 

அரியலூர், நவ. 23: அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக் குழுவினரின் கோலப்போட்டிகளை கலெக்டர் ரத்தினசாமி நேற்று பார்வையிட்டார். “வாக்களிப்பதே சிறந்தது நான் நிச்சயம் வாக்களிப்பேன்” என்ற தலைப்பின் கீழ் நடைபெற்ற ரங்கோலி கோலப்போட்டியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 13 மகளிர் சுய உதவிக்குழுவினர் பங்கேற்றனர். இக்கோலப்போட்டியினை அரியலூர் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு போட்டியில் பங்கேற்ற மகளிர் சுயஉதவிக் குழுவினர்களுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டையும் தெரிவித்தார்.
மேலும், இப்போட்டியில் முதல் மூன்ற இடம் பெறும் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ஜனவரி 25ல் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெறும் தேசிய வாக்காளர் தினத்தன்று ரொக்கபரிசுகள் வழங்கப்பட உள்ளன.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் ரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிமளம், உதவி திட்ட அலுவலர் (கூடுகை மற்றும் கூட்டாண்மை) முத்து, வட்டாட்சியர் (தேர்தல்) வேல்முருகன், அரசு அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் விழிப்புணர்வு கோலப்போட்டி appeared first on Dinakaran.

Read Entire Article