அரியலூரில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு

3 months ago 8

அரியலூர், பிப். 6: அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி வெளியிட்ட செய்தி குறிப்பு ; அரியலூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தரும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி, பிப்ரவரி 7 நாளை (காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை) அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் நடைபெற உள்ள சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் LIC நிறுவனம் கலந்து கொண்டு 200-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தங்களுக்கு தேவையான ஆட்களை தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்ய உள்ளனர்.

இம்முகாமில் கலந்து கொள்வதற்காக தகுதிகள் கல்வித்தகுதி: SSLC, + 2, Any Degree, ITI, Diploma வயது வரம்பு: 18 வயது முதல் 45 வயது வரை
பாலினம்: பெண்கள் மட்டும், நாள் நாளை பிப்ரவரி 7 (வெள்ளிக்கிழமை) மாத ஊதியம் : ரூ.7000 + தேவையான ஆவணங்கள்: சுயவிவர படிவம், கல்வி சான்றிதழ் நகல் மற்றும் புகைப்படம் மட்டும் மேலும் விவரங்களுக்கு 9499055914 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த வாய்ப்பினை அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி, தெரிவித்துள்ளார்.

The post அரியலூரில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article