அரியலூரில் சாலை மறியல் சிஐடியூ தொழிற்சங்கத்தினர் 46 பேர் கைது

1 month ago 11

அரியலூர், அக். 2: அரியலூர் மாவட்ட சிஐடியூ தொழிற்சங்கத்தினர் சாம்சங் கைபேசி நிறுவனத்தில் பணி புரியும் தொழிலாளர்களின் தொழிற் சங்க பதிவினை ஏற்க மறுக்கும் சாம்சங் நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி, அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட சிஐடியூ நிர்வாகிகள் 46 பேர் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியூ அரியலூர் மாவட்ட தலைவர் கே கிருஷ்ணன் தலைமை வகித்தார். சி ஐ டி யூ நிர்வாகிகள் ஏ சத்தியமூர்த்தி, எம் ராமசாமி,பி தென்னரசு,ஆர் ரவீந்திரன், எஸ் கந்தன், ஜோதிவேல், எ அருண்பாண்டியன், எம் சரவணன், கருப்பையா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சிஐடியூஅரியலூர் மாவட்ட செயலாளர் பி துரைசாமி, மாவட்ட துணைத் தலைவர் ஆர் சிற்றம் பலம்,மாவட்ட பொருளாளர் கே கண்ணன்,மாவட்டத் துணைச் செயலாளர் ஈ ரங்கராஜ் , மாவட்டத் துணைச் செயலாளர் எம் முருகன், மாவட்ட துணைத் தலைவர் வி.ராஜாமணி உள்ளிட்டோர் சாம்சங்கை பேசி தொழிற்சாலை நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத நடவடிக்கையை கண்டித்து கண்டனஉரையாற்றினர்.

தொடர்ந்து, சிஐடியூ மாவட்ட தலைவர் கே.கிருஷ்ணன் தலைமையில் 40க்கு மேற்பட்டோர் அண்ணா சிலையிலிருந்து ஊர்வலமாக கிளம்பி அரியலூர் வட்டாட்சியர் அலுவலக ம் முன்பு அமர்ந்து சாலை மறியல் போராட்ட த்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 46 சிஐடியூ நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர், கைது செய்யப்பட்ட சிஐடியூ நிர்வாகிகள் அயிரம் கால் மண்டபம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு, பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

The post அரியலூரில் சாலை மறியல் சிஐடியூ தொழிற்சங்கத்தினர் 46 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article