அரியலூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

2 months ago 12

 

அரியலூர், நவ. 19: அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் விசுவநாதன் தலைமை வகித்தார். அரியலூர் மாவட்டத் தலைவர் சின்னப்பன், ஒன்றியத் தலைவர் ராமசாமி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் பரமசிவம், பொதுக் குழு உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் ஒன்றியச் செயலாளர்கள் மற்றும் சங்க பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண் முழக்கமிட்டனர்.ஆர்ப்பாட்டத்தில், நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்.

பொன்னாற்று தலைப்பில் கொள்ளிடத்தின் குறுக்கே தடுப்பணைக் கட்டுவதற்கான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். முந்திரி கொட்டை மற்றும் பழச்சாறு தொழிற்சாலை அமைக்க வேண்டும். நெல், மக்காச்சோளம், உளுந்து சாகுபடிக்கான காப்பீடு தொகையை உடனடியாக மாவட்ட நிர்வாகம் பெற்றுத் தர வேண்டும். சிமென்ட் ஆலையில் இருந்து வெளியேறும் துகள்கள், விவசாய நிலங்களில் படர்வதால், நிலங்கள் மலடாகி விவசாய அழிந்து வரும் சூழல் உள்ளது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரியலூரை வறட்சி மாவட்டமாக அறிவித்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மின்சார திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

The post அரியலூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article