அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து - மத்திய அரசு அறிவிப்பு

4 hours ago 1

புதுடெல்லி,

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அந்த திட்டத்தை முழுமையாக ரத்துசெய்ய வலியுறுத்தி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் டங்ஸ்டன் திட்டத்தை முழுமையாக ரத்துசெய்ய பா.ஜ.க. கட்சி முயற்சிகளை மேற்கொண்டது. இதுதொடர்பாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமையில் பொதுச்செயலாளர் ராம.சீனிவாசன் மற்றும் சுரங்கம் அமைய இருந்த பகுதியைச் சேர்ந்த 7 பேர் கொண்ட விவசாயிகள் குழு டெல்லியில் நேற்று மத்திய சுரங்கத்துறை மந்திரி கிஷன் ரெட்டியை அவரது அமைச்சகத்தில் சந்தித்து பேசினார்கள்.

அப்போது, தமிழ்நாட்டில் டங்ஸ்டன் திட்டம் கைவிடப்படுவது குறித்த உத்தரவாதத்தை மந்திரி அளித்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் டங்ஸ்டன் சுரங்க திட்டம் முழுமையாக கைவிடப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

விரிவான ஆலோசனைக்குப் பிறகு, அப்பகுதியில் உள்ள பல்லுயிர் பாரம்பரிய தளத்தின் முக்கியத்துவம் மற்றும் பாரம்பரிய உரிமைகளைப் பாதுகாப்பதில் அரசின் அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்வதாக மத்திய மந்திரி கிஷன் ரெட்டி அறிவித்துள்ளார். டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article