அரவக்குறிச்சி அருகே பரிதாபம் கழிவுநீர் ஓடையில் மூழ்கி சிறுவன் பலி

1 month ago 9

 

அரவக்குறிச்சி, அக். 9: அரவக்குறிச்சி அடுத்த பள்ளப்பட்டியில், பள்ளியிலிருந்து திரும்பிய சிறுவன் நேற்று பெய்த மழையில், கழிவுநீர் ஓடையில் தவறி விழுந்து இறந்தான்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த பள்ளப்பட்டியைச்சேர்ந்த மன்சூர் அலி மகன் முகமது உஸ்மான் (12), பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்நிலையில் நேற்று மாலை பெய்திருந்நிலையில் சாக்கடைகளில் தண்ணீர் நிரம்பி ஓடிக்கொண்டிருந்தது. முகமது உஸ்மான் பள்ளி முடிந்து சைக்கிலில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தான். அப்போது திண்டுக்கல் ரோடு தனியார் வங்கி எதிரில் உள்ள கழிவுநீர் ஓடையில் தனது சைக்கிளுடன் தவறி விழுந்துல்ளான். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து உஸ்மானை மீட்க முயன்றனர். ஆனால் உஸ்மான், மழை நீரில் சாக்கடைக்குள் அடித்துச்செல்லப்பட்டான். தகவலறிந்த அரவக்குறிச்சி காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து சிறுவனை தேடினர். பள்ளப்பட்டி அரசு மருத்துமனை கார்னர் அருகில் உள்ள நங்காஞ்சி ஆற்றில் சாக்கடை நீர் கலக்குமிடத்தில் இருந்து சிறுவன் சடலமாக மீட்கப்பட்டான். போலீசார் பள்ளபட்டி அரசு மருத்துவமனையில் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இதுகுறித்து கரூர் ஊரக உட்கோட்ட காவல்துணை கண்காணிப்பாளர் அப்துல் கபூர் மற்றும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

 

The post அரவக்குறிச்சி அருகே பரிதாபம் கழிவுநீர் ஓடையில் மூழ்கி சிறுவன் பலி appeared first on Dinakaran.

Read Entire Article