அரபிக்கடலில் 22ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்: தமிழகத்தில் மழை நீடிக்கும்

3 hours ago 4

சென்னை: அரபிக்கடல் பகுதிகளில் வரும் 22ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். மேலும் தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதோபோல் வரும் 22ம் தேதி அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.

தமிழகத்தில் மே 20ம் தேதி வரை மழை தொடரும். மேலும் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான பெய்யக்கூடும். இதனால் இன்று கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன் தொடர்ச்சியாக 23ம் தேதி வரை தமிழகத்தில் அநேக இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 21ம் ேததி வரை இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறைவாக இருக்கும்.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கும். 21ம் தேதி வரை தென்தமிழக கடலோர பகுதிகள் மன்னார் வளைக்குடா அதையொட்டி குமரி கடல் பகுதிகளில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் சூறாவளிக்காற்று வீசும் என வானிலை ஆய்வு ைமயம் தெரிவித்துள்ளது.

The post அரபிக்கடலில் 22ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்: தமிழகத்தில் மழை நீடிக்கும் appeared first on Dinakaran.

Read Entire Article