அரசூர் கிராமத்தில் வீடுகளை அடித்துச் சென்ற மலட்டாற்று வெள்ளம்..

4 months ago 16
விழுப்புரம் மாவட்டத்தில் தென் பெண்ணைஆற்றின் வெள்ளப் பெருக்கால் அதன் கிளை ஆறான மலட்டாற்றில் கரை புரண்டு ஓடிய வெள்ளம் அரசூர் பகுதியில் உள்ள குடியிருப்புகளை அடித்துச் சென்றது. இதனால், பல வாகனங்கள் மண்ணில் புதைந்து கிடப்பதுடன் வீட்டிற்குள் சேரும் சகதியுமாக இருப்பதால் கைக் குழந்தைகளுடன் சாலையிலேயே அமர்ந்துள்ளனர். ஒருவேளை உணவு சமைத்து சாப்பிட கூட எந்த பொருட்களும் இல்லை எனவும் வீட்டிலிருந்த பொருட்கள் அத்தனையும் அடித்துச் செல்லப்பட்டதாகவும் அப்பகுதி பெண்கள் தெரிவித்தனர். தண்ணீர் சூழ்ந்தவுடன் பாதுகாப்பான இடங்களில் சென்று தங்கி இருந்ததாகவும், வெள்ளம் வடிந்த பின்னரும் இதுவரை உணவு, குடிநீர் கிடைக்கவில்லை என்றும் கூறினர்.
Read Entire Article