அரசுப் பள்ளிகளில் ஒரு மாதத்தில் 1.17 லட்சம் மாணவர்கள் சேர்க்கை - அமைச்சர் தகவல்

1 day ago 3

சென்னை,

பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு முழுவதும் அரசுப்பள்ளிகளில் 2025 - 2026-ஆம் ஆண்டிற்காக மாணவச் சேர்க்கையை மார்ச் 1-ஆம் தேதி சென்னையில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். அன்றிலிருந்து ஏராளமான பெற்றோர் தங்கள் பிள்ளைகளை ஆர்வமுடன் அரசுப்பள்ளிகளில் சேர்த்து வருகிறார்கள்.

சேர்க்கை தொடங்கியது முதல் கடந்த ஒரு மாதத்தில் மாநிலம் முழுவதும் 1-ஆம் வகுப்பிற்கு 1,05,286 மழலையர் உட்பட ஏனைய வகுப்புகளும் சேர்த்து மொத்தம் 1,17,310 மாணவச் செல்வங்கள் சேர்ந்துள்ளனர். அனைவருக்கும் வாழ்த்துகள்.

தொடர்ந்து மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. கல்வியின் துணை கொண்டு உலகை வெல்ல நம் அரசுப்பள்ளிகளே தலைசிறந்த முறையில் அடித்தளமிடும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு முழுவதும் அரசுப்பள்ளிகளில் 2025 - 2026-ஆம் ஆண்டிற்காக மாணவச் சேர்க்கையை மார்ச் 1-ஆம் தேதி சென்னையில் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தொடங்கி வைத்தார்கள். அன்றிலிருந்து ஏராளமான பெற்றோர் தங்கள் பிள்ளைகளை ஆர்வமுடன் அரசுப்பள்ளிகளில் சேர்த்து வருகிறார்கள்.

சேர்க்கை…

— Anbil Mahesh (@Anbil_Mahesh) April 1, 2025

Read Entire Article