அரசுத்துறைகளில் மின்சார வாகன பயன்பாடு- சுப்ரீம் கோர்ட்டு முக்கிய உத்தரவு

1 week ago 3

புதுடெல்லி,

டெல்லி காற்று மாசு தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கு, நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, புஜ்ஜால் புயன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பட்டி, டெல்லியில், அனுமதிக்கப்பட்ட ஆண்டுகளை கடந்து 60 லட்சம் வாகனங்கள் இயங்கி வருவதாக கூறினார்.

அதைக்கேட்ட நீதிபதிகள், காற்று மாசை குறைக்க அரசுத்துறைகளில் மின்சார வாகனங்களை பயன்படுத்துவது பற்றி 30-ந் தேதிக்குள் திட்ட யோசனை சமர்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

Read Entire Article