அரசு வேலை வாங்கி தருவதாக பணமோசடி

1 month ago 8

 

திண்டுக்கல், அக். 10:திண்டுக்கல் அருகே மாரம்பாடியை சேர்ந்தவர் இருதயராஜ் (63). இவரிடம், சென்னை சீதக்காதி நகரை சேர்ந்த முகமது சகாபுதீன், திண்டுக்கல் சிஇஓ ஆபீசில் பணிபுரிவதாக அறிமுகம் ஆகியுள்ளார். இவரது நண்பர் திண்டுக்கல் முகமது சித்திக். இருதயராஜின் மகளுக்கு தனது ஆபீசில் கணினி ஆபரேட்டர் வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு ரூ.10 லட்சம் செலவாகும் என முகமது சகாபுதீன் தெரிவித்துள்ளார். இதை நம்பிய இருதயராஜ் தனது வங்கி கணக்கு மூலம் ரூ.7 லட்சத்து 10 ஆயிரத்தை முகமது சகாபுதீனுக்கு வழங்கியுள்ளார்.

ஆனால், அவர் கூறியபடி வேலை வாங்கி தரவில்லை. வாங்கிய பணத்தையும் திரும்ப தரவில்லை. இதனால் சந்தேகமடைந்த இருதயராஜ், திண்டுக்கல் சிஇஓ ஆபீசில் விசாரித்த போது, அங்கு முகமது சகாபுதீன் வேலை செய்யவில்லை என்பதும், பணமோசடி செய்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து இருதயராஜ் திண்டுக்கல் எஸ்பி ஆபீசில் புகார் அளித்தார். எஸ்பி உத்தரவின் பேரில் குற்றப்பிரிவு போலீசார் முகமது சகாபுதீன், முகமது சித்திக் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post அரசு வேலை வாங்கி தருவதாக பணமோசடி appeared first on Dinakaran.

Read Entire Article