சென்னை : புத்தாய்வு திட்டத்தின் கீழ் பயிற்சியளிக்க ஆண்டுதோறும் ரூ.6.5கோடி ஒதுக்கப்படுகிறது என்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச்செயலகத்தில் நடந்த முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்களுக்கு நிறைவு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பயிற்சி பெற்றவர்களுக்கு நிறைவுச் சான்றிதழ்களை வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.இதனிடையே தான் பங்கேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து 3 முறை பாடப்பட்டது குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த உதயநிதி ஸ்டாலின், “எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. புத்தாய்வு திட்டத்தின் கீழ் பயிற்சியளிக்க ஆண்டுதோறும் ரூ.6.5 கோடி ஒதுக்கப்படுகிறது. புத்தாய்வு திட்டத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.2 லட்சம் வரை ஊதியத்தில் வேலை கிடைத்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கு நிறைவு சான்றிதழ் வழங்கப்பட்டது . சான்றிதழ் வழங்கும் அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்படவில்லை; Technical faultதான், மைக் சரியாக வேலை செய்யவில்லை, இரண்டு.. மூன்று.. இடத்தில் பாடியது குரல் கேட்கவில்லை; அதனால் மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் இருந்து சரியாக பாடியிருக்கிறோம்; தேசிய கீதமும் சரியாக பாடப்பட்டிருக்கிறது. தேவையில்லாமல் மீண்டும் பிரச்சனைகளை கிளப்ப வேண்டாம்,”இவ்வாறு தெரிவித்தார்.
The post அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்படவில்லை; டெக்னிக்கல் பிரச்னையால் பாடியது சரியாக கேட்கவில்லை : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.