சென்னை: கல்குவாரிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் கூறினார். சென்னை தலைமை செயலகத்தில் நீர்வள துறை மற்றும் இயற்கை வளங்கள்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழ்நாட்டில் கல்குவாரிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் அதன் நீட்டிப்பு வழங்குவது குறித்து கல்குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்க உறுப்பினர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது: தமிழ்நாட்டில் உள்ள கல்குவாரிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் நீட்டிப்பு வழங்குவது குறித்த கோரிக்கைகள் அரசு விதிகளின்படி பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார். இக்கூட்டத்தில் இயற்கை வளங்கள்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி, மாநில சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் தலைவர் தீனபந்து, புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையர் சரவண வேல்ராஜ், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை இயக்குநர் ராகுல்நாத் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post அரசு விதிகளின்படி கல்குவாரிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி: அமைச்சர் துரைமுருகன் தகவல் appeared first on Dinakaran.