அரசு முறை பயணமாக டெல்லி வந்துள்ள மாலத்தீவு அதிபர் முய்சு, பிரதமர் மோடியுடன் சந்திப்பு

4 months ago 31
அரசு முறை பயணமாக, இந்தியா வந்துள்ள மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது நெருங்கிய அண்டை நாடு மற்றும் நட்பு நாடான மாலத்தீவுக்கு பிரச்சனை என்றால் முதலில் உதவி செய்வது இந்தியா தான் என பிரதமர் மோடி தெரிவித்தார். மாலத்தீவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக பிரதமர் குறிப்பிட்டார். மாலத்தீவில் இந்தியாவின் ரூபே பணப்பரிமாற்ற சேவையை இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக தொடங்கிவைத்தனர். அதிபராக முய்சு பதவியேற்ற பின்னர் இரு நாட்டு உறவில் ஏற்பட்ட விரிசலால், இந்திய ராணுவம் மாலத்தீவிலிருந்து வெளியேறியது. இந்நிலையில், டெல்லிக்கு வந்துள்ள முய்சு இந்தியாவுடன் இணக்கமான நல்லுறவை பேண விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
Read Entire Article