அரசு மாணவியர் விடுதியில் அரிசி கடத்தல்.. பள்ளி மாணவிகளை வைத்தே எடுத்துச் செல்வதாக புகார்

5 hours ago 2
கமுதி அடுத்துள்ள நீராவி அரசு உதவி பெறும் பள்ளி விடுதியில் பணியாற்றும் பெண்கள் மாணவிகளை வைத்தே அரிசியை மூட்டைகளில் கட்டி கடத்திச் செல்வதாகக் கூறி அப்பகுதி இளைஞர்கள் வீடியோ வெளியிட்டு புகார் தெரிவித்துள்ளனர். விடுதியில் காப்பாளராக பணியாற்றும் பாக்கியலட்சுமி, சமையலராக பணியாற்றும் ராசம்மாள் ஆகியோர் ஒவ்வொரு வாரமும் இதேபோன்று அரிசியை வெளியூருக்கு எடுத்துச் செல்வதாகக் கூறியுள்ள இளைஞர்கள், மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் விடுதியில் ஆய்வு செய்யுமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.
Read Entire Article