செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தாய், குழந்தை திடீரென மாயமாகினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் அருகே இரும்புலி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தராஜ் புஷ்பலதா ஆகிய இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகின்றது. இந்த தம்பதிக்கு 2 வயதில் திரிஷா என்ற பெண் குழந்தையும் உள்ளது.
குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களுக்கு முன்பு கணவன் – மனைவி இருவரும் பிரிந்து வசித்து வருகின்றனர். புஷ்பலதா தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகின்றதாக கூறப்படுகின்றது.
இதனிடையே, இரண்டு வயது பெண் குழந்தை திரிஷாவுக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு வயது பெண் குழந்தையை நேரில் பார்க்க புஷ்பலதாவின் சகோதரர் தனசேகர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவர்களுடைய செல்போன் எண் அனைத்து வைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையிலும் இருவரும் இல்லாததால் செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் தனசேகர் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில், செங்கல்பட்டு நகர போலீசார் வழக்கு பதிவு செய்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மாயமான தாய், குழந்தையை தேடி வருகின்றனர். செங்கல்பட்டில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாய் – மகள் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தாய் – குழந்தை திடீர் மாயம்: செங்கல்பட்டில் பரபரப்பு appeared first on Dinakaran.