அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

2 weeks ago 2

மதுரை, ஜன. 18: மதுரையில் சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மதுரையில் சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் மற்றும் வட்டார போக்குவரத்துத் துறை அலுவலர்கள் பல்வேறு வகையில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் சிங்காரவேலு உத்தரவின் பேரில், போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மாநகரின் பேருந்து நிலையங்கள், முக்கிய சிக்னல் சந்திப்புகள் உள்ளிட்ட இடங்களிுல் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக நேற்று ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் பொதுமக்கள், வியாபாரிகள், மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும், சாலை விதிகள், அதனை பின்பற்ற வேண்டியதன் அவசியம் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதேபோல் டிரைவர் மற்றும் கண்டக்டர்களிடம் பஸ்களை பாதுகாப்பாக இயக்குவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் அரசு போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Read Entire Article