அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஓரிக்கை தொழிற்கூடத்திற்கு பணித்திறன் நற்சான்று விருது

1 month ago 5

காஞ்சிபுரம், ஜன.30: ஓரிக்கை மத்திய தொழிற்கூடத்திற்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பணித்திறன் நற்சான்று விருது வழங்கப்பட்டது. அரசு போக்குவரத்து கழகம் சார்பில், விழுப்புரம் கோட்டத்தில் உள்ள 6 மண்டலங்களில் உள்ள 55 பணிமனைகளில் காஞ்சிபுரம் மண்டலம், ஓரிக்கை மத்திய தொழிற்கூடத்தில் பணிபுரியும் தகுதிசான்று பிரிவு மேலாளர் கருணாகரனுக்கு, சிறந்த பணித்திறன் நற்சான்று விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், காஞ்சிபுரம் மண்டல பொது மேலாளர் தட்சணாமூர்த்தி கலந்துகொண்டு, ஓரிக்கை மத்திய தொழிற்கூடத்தில் பணிபுரியும் தகுதிசான்று பிரிவு மேலாளர் கருணாகரனுக்கு விருது மற்றும் சான்றிழ் வழங்கி பாராட்டினார்.

இதுகுறித்து, ஓரிக்கை மத்திய தொழிற்கூட தகுதிசான்று பிரிவு மேலாளர் கருணாகரன் கூறியதாவது: “உத்திரமேரூர் பணிமனையில் கிளை மேலாளராக பணிபுரிந்தபோது, கடந்த 2019, லோக்சபா தேர்தலன்று, தமிழகத்திலேயே, 133 சதவீதம் பேருந்து இயக்கப்பட்டது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தல் தினத்தன்று, 100 சதவீதம் ஊழியர்கள் ஒட்டளித்ததோடு, 122 சதவீதம் பேருந்துளும், நகர்புற உள்ளாட்சி தேர்தலில், 115 சதவீதம் பேருந்துகளை இயக்கப்பட்டது.
கடந்த 2022ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு, புனிதவெள்ளி, சனி, ஞாயிறு என தொடர் விடுமுறையில், 370 சதவீதம் இயக்கப்பட்டது. தமிழகத்திலேயே, அரசு போக்குரவத்து கழகத்தில், 2019ம் ஆண்டு முதல், 2021 வரை என தொடர்ந்து 3 ஆண்டுகளாக பஸ் இயக்க காலத்தில், அனைத்து பஸ்களையும் இயக்கியதற்காக பணித்திறன் நற்சான்றிழ் மற்றும் விருது வழங்கப்பட்டது. தற்போது, ஓரிக்கை பணிமனை எண் 2ல் பணிமனைக்கு விருது வழங்கப்பட்டுள்ளது’’ என்றார்.

The post அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஓரிக்கை தொழிற்கூடத்திற்கு பணித்திறன் நற்சான்று விருது appeared first on Dinakaran.

Read Entire Article