அரசு பேருந்தில் பெண் நடத்துனர் நியமனம்

18 hours ago 2

கோத்தகிரி, ஜன.30: நீலகிரி மாவட்ட தொமுசவில் கோத்தகிரி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பொறுப்பு வகித்து வந்தவர் நடத்துனர் கருப்புசாமி. இவர் பணிபுரிந்து இறந்த நிலையில், அவரது மனைவி சுகன்யா கணவரின் பணியை வாரிசு பணியாக வழங்கும்படி தமிழ்நாடு முதல்வருக்கு மனு அனுப்பி இருந்தனர்.

இதனை பரிசீலனை செய்து கணவரின் நடத்துனர் பணியை தமிழ்நாடு முதலமைச்சரின் நேரடி பார்வையின் கீழ் உடனடி ஆணை பிறப்பிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் முதல் பெண் நடத்துனரான சுகன்யா முதல்வருக்கு நன்றி தெரிவித்து நேற்று பணிக்கு சேர்ந்தார். இந்த நிகழ்வில் கோத்தகிரி அரசு பணிமனை தொமுச நிர்வாகிகள் செயலாளர் குமார், தலைவர் ரத்தினம், டிக்கட் பரிசோதகர் முருகன் உள்ளிட்ட பலர் கொண்டார்.

The post அரசு பேருந்தில் பெண் நடத்துனர் நியமனம் appeared first on Dinakaran.

Read Entire Article